பிரபல வன விலங்கு நிகழ்ச்சி தொகுப்பாளரான பியர் கிரில்ஸின் ‘மேன் வெர்சஸ் வைல்ட் வித் பியர் கிரில்ஸ்’ நிகழ்ச்சி புகழ் பெற்றது. இதில், ஒபாமா, மோடி, ரஜினி உள்ளிட்ட பிரபலங்கள் இடம் பெற்று அவருடன் காட்டில் சாகசப் பயணம் மேற்கொண்டனர். சமீபத்தில் பியர் கிரில்ஸ் வெளியிட்ட முகநூல் பதிவில், பிரதமர் நரேந்திர மோடியுடன் 2019ல் விருந்தினராக தனது நிகழ்ச்சியின் படப்பிடிப்பின் போது அவர் அனுபவித்த அனுபவத்தை நினைவு கூர்ந்தார். இந்த நிகழ்ச்சி தொலைக்காட்சியில் அதிகம் பார்க்கப்பட்ட நிகழ்ச்சிகளில் ஒன்றாக இருந்தது. தனது அந்த முகநூல் பதிவில், கிரில்ஸ், ஈர உடைகளுடன் மோடியுடன் தரையில் அமர்ந்து தேனீர் அருந்தும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அந்த நிகழ்வில் கிரில்ஸ் தானே உருவாக்கிய ஒரு சிறு படகைப் பற்றி குறிப்பிடுகையில், ‘அதை எங்கள் இருவர் பயணத்திற்கு உருவாக்கினேன். ஆனால் பிரதமர் மோடி அதில் ஏறிய தருணத்தில் அது கிட்டத்தட்ட மூழ்கியேவிட்டது, எனவே அவர் படகில் இருந்து இறங்கி அதனுடன் நீந்தினார்’ என தன் அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். கிரில்ஸ் அந்த புகைபடத்தை “எனக்கு பிடித்த புகைப்படங்களில் ஒன்று” என்று கூறியுள்ளார். பிரதமர் மோடியுடனான இந்த நிகழ்ச்சியை, ‘பாரதப் பிரதமருடன் ஒரு காட்டில் இந்த சாகச நிகழ்ச்சியை நடத்துவது ஒரு பெரிய பாக்கியம்’ என்று தெரிவித்த கிரில்ஸ், பாரதம் குறித்தும் அதன் இளைஞர்கள் குறித்தும் பிரதமர் மோடியின் தொலைநோக்குப்பார்வையை வெகுவாக பாராட்டினார். பிரத மர் மோடியுடன் நேரத்தை செலவி
டுவது பாரதம் எவ்வளவு அழகா கவும் துடிப்பாகவும் இருக்கிறது என்பதை எனக்குக் காட்டியது என்றும் அவர் கூறினார்.