கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்துள்ள நிறுவனங்களில் முக்கியமானது அமெரிக்காவை சேர்ந்த பைசர் நிறுவனம். இந்நிறுவனம், தன் மருந்துகளை கொடுக்க வேண்டும் என்றால் அதற்கு முக்கிய ராணுவ தளங்கள், பெடரல் ரிசர்வ் வங்கி எனப்படும் மத்திய வங்கிகளையே பிணையமாக வழங்க வேண்டும், தங்கள் நிறுவனத்திற்கு அனைத்து விதங்களிலும் சட்ட பாதுகாப்பு வழங்க வேண்டும் என பிரேசில், அர்ஜென்டினா நாடுகளை கேட்டு மிரட்டியுள்ளது. கொரோனா பரவலை தனக்கு ஆதாயமாக பயன்படுத்தி கோடிக்கணக்கில் பணம் சம்பாதிப்பது மட்டுமில்லாமல், ஒரு நாட்டு ராணுவ தளங்களையும் மத்திய வங்கியையும் பிணையமாக கேட்பது அந்த நாட்டின் இறையாண்மையையே பிணையமாக கேட்பதற்கு சமம். முன்னதாக கடந்த பிப்ரவரியில், பாரதத்தில் எந்த மருத்துவ பரிசோதனைகளும் இன்றி தனது கொரோனா தடுப்பூசிக்கு அவசர ஒப்புதல் அளிக்கக் கோரி பைசர் விண்ணப்பித்திருந்தது. இதனை மத்திய அரசு நிராகரித்தது. ஆனால், அந்த நிறுவனத்திற்கு ஆதரவாகவும் அவர்களின் மருந்தை அரசு உடனடியாக அனுமதிக்க வேண்டும் என்றும் பல இடதுசாரி ஆதரவு அமைப்புகளும் ஊடகங்களும் பேசின என்பது பல சந்தேகங்களை கிளப்புகிறது.