பெட்ரோல் குண்டு பயிற்சி

பி.பி.சி செய்தி நிறுவனத்தின் மத்திய கிழக்குப் பகுதியின் ஆசிரியர் ஜெரமி போவன், தனது டுவிட்டரில், உக்ரேனிய மக்கள், போர் சூழலில் பெட்ரோல் குண்டை எவ்வாறு பயன்படுத்துவது என்று பயிற்சி அளித்துள்ளார். அதில் ரஷ்ய கவச வாகனங்கள், டாங்கிகளில் உள்ள காற்று போக்கிகள், கதவுகள் போன்ற  பலவீனமான இடங்களைக் காட்டும் படத்தை வெளியிட்டு ரஷ்ய டாங்கிகளில் அவை எங்கிருக்கும் என்றும் விளக்கியுள்ளார். ஆனால், ஜெர்மி போவன் பொதுமக்களுக்கு அளித்துள்ள இந்த பரிந்துரைகள் மிகவும் ஆபத்தானது.  ஏனெனில் இது வன்முறை,  கலவரங்களை அதிகரிக்கும். ரஷ்யாவின் அதிநவீன அதிக அளவிலான ஆயுதங்கள் கொண்ட பயிற்சி பெற்ற ராணுவ வீரர்களுடனான இவ்வகையான மோதல்களில் பொதுமக்களின் உயிரிழப்பு அதிகரிக்கும். மேலும், டாங்கிகள், கவச வாகனங்களுக்கு எதிராக இவ்வகை குண்டுகள் எதிர்பார்த்த பலனை தராது. ரஷ்யாவில் ஊடகங்கள் போலிச் செய்திகளைப் பரப்புவதைத் தடைசெய்ய  விளாடிமிர் புதின் எடுத்த கடுமையான நடவடிக்கையை அடுத்து, பி.பி.சி உட்பட பல ஊடகங்கள் ரஷ்யாவில் செய்திகளை வெளியிடுவதை நிறுத்திவிட்டன. மேற்கத்திய நாடுகளை சேர்ந்த இவ்வகை இடதுசாரி ஊடகங்கள் பலமுறை மறைமுகமாக, சில சமயங்களில் நேரடியாக சமூக விரோத செயல்களை ஆதரிக்கின்றன என்பது இதன் மூலம் வெளிப்பட்டுள்ளது. இவர்கள் பாரதத்திலும் இவ்வாறே செயல்படுகின்றனர் என்பதும் நினைவு கூரத்தக்கது.