ஊடுருவலை தடுக்க மனு

வங்கதேசம் மற்றும் ரோஹிங்கியாக்கள் உட்பட அனைத்து சட்டவிரோத குடியேறிகளையும், ஊடுருவல்காரர்களையும் ஓராண்டுக்குள் கண்டறிந்து, அவர்களை தடுப்பு காவலில் வைக்கவும் நாடு கடத்தவும் மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரி வழக்கறிஞர் அஷ்வினி குமார் உபாத்யாய உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கோரியிருந்தார். இதற்கு பதில் மனு தாக்கல் செய்த கேரள அரசு, கடந்த ஐந்து ஆண்டுகளில், கைது செய்யப்பட்ட 70 வங்க தேசத்தவர்களில் 57 பேர் வங்க தேசத்திற்கு நாடு கடத்தப்பட்டனர். மீதமுள்ள 13 பேர் மீது சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன. கேரளாவில் எல்லை தாண்டிய அச்சுறுத்தல்கள் இல்லை என்று தெரிவித்துள்ளது. அஷ்வினி குமார் இம்மனுவில், ஊடுருவல் மாஃபியாக்களுடன் தொடர்பில் உள்ளவர்கள், ஊடுருவ உதவுபவர்கள், போலி ஆவணம் தயாரிக்க உதவுவோர், சம்பந்தப்பட்ட அரசு ஊழியர்கள், காவல்துறையினர், பாதுகாப்புப் படையினருக்கு எதிராக தேசிய பாதுகாப்புச் சட்டத்தை செயல்படுத்த உத்தரவிட வேண்டும் என்றும் கோரியுள்ளார்.