இலங்கையில் நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடியால் கஷ்டப்படும் மக்களுக்கு உதவிட முதல்கட்டமாக அரிசி, மருந்து, பால்பவுடர் என ரூ.123 கோடிக்கு அத்தியாவசியப் பொருட்களை இலங்கைக்கு அனுப்ப தமிழக அரசு மத்திய அரசிடம் அனுமதி கோரி விண்ணப்பித்தது. இதனையடுத்து, முதல்வர் ஸ்டாலினுக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் எழுதியுள்ள கடிதத்தில், ‘இலங்கை மக்களுக்கு தமிழக அரசின் மனிதாபிமான உதவிகள் குறித்து வெளியுறவுத்துறை, தூதரகம் வாயிலாக இலங்கை அரசை தொடர்பு கொண்டு கேட்டது. உதவிகள் அடிப்படையில் நிவாரணத்தை பெற்றுக்கொள்ள இலங்கை சம்மதித்தது. இதையடுத்து, நிவாரணப் பொருட்கள் குறித்த விரவங்களை மத்திய அரசுக்கு தெரிவிக்கும்படி தமிழக அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே, ஸ்டாலின், தமிழக தலைமைச் செயலருக்கு அறிவுறுத்தி, மத்திய அரசுடன் இணைந்து இலங்கை மக்களுக்கு தேவையான நிவாரணப் பொருட்களை அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.