மேற்கு வங்கத்தில் நடைபெறும் ஓயாத வன்முறைகளுக்கு மத்தியில், சமீபத்திய தீவைப்பு சம்பவம், பாலியல் பலாத்கார வழக்குகளில், மேற்கு வங்க அரசு அமைத்துள்ள சிறப்பு விசாரணைக்குழு எதையும் ஆழமாக, முறையாக விசாரிக்கவில்லை. காரணம் அவர்களுக்கு கட்சியின் மேலிடத்தில் இருந்து தரப்படும் அழுத்தம். இதனால், சிறப்பு விசாரணைக்குழு உண்மையில் எதுவுமே செய்யவில்லை. அதை மக்கள் இப்போது புரிந்துகொண்டுள்ளனர். எனவே இந்த விவகாரத்தில் மக்கள் சி.பி.ஐ விசாரணைக்கான கோரிக்கையை வைப்பது முற்றிலும் நியாயமானதே. திருணமூல் காங்கிரஸ் கட்சியினரால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பமும் சி.பி.ஐ விசாரணையை விரும்பும் சூழ்நிலை உள்ளது. மேற்கு வங்க உள்ள மக்கள், மாநில காவல்துறை மீது நம்பிக்கை முற்றிலும் இழந்துவிட்டனர்’ என தெரிவித்துள்ளார்.