வேட்பாளர் வழக்குகளை மக்கள் அறியலாம்

குற்றப் பின்னணி கொண்ட தேர்தல் வேட்பாளர்களின் விவரங்களை அந்தந்த கட்சிகள் தங்களில் இணையதளத்தின் முகப்புப் பக்கத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் அதற்காக தனி தலைப்பு வழங்கலாம். இந்திய தேர்தல் ஆணையத்துக்கு,  குற்றப் பின்னணி உடைய வேட்பாளர் விவரங்களை குறித்த தகவல்களை மக்கள் எளிதாக அறிய வசதியாக, ஒரு பிரத்தியேக மொபைல் ஆப் உருவாக்க வேண்டும். இவற்றில் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட உடன் அவரது விவரங்களை 48 மணி நேரத்தில் வெளியிட வேண்டும். அதனை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்த சமூக ஊடகங்கள், இணையதளங்கள், தொலைக்காட்சி விளம்பரங்கள், விவாதங்கள், துண்டு பிரசுரங்கள் உள்ளிட்ட முயற்சிகளை எடுக்க வேண்டும். இது குறித்த நீதிமன்ற அவமதிப்பு விவகாரங்களைக் கையாள தேர்தல் ஆணையம் ஒரு பிரத்தியேக நிதியத்தை 4 வார காலத்திற்குள் உருவாக்க வேண்டும்’ என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.