பூஸ்டர் டோஸ் போட மக்கள் தயக்கம்.

நாடு முழுவதும், கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தடுப்பூசி போடப்படுகிறது. முதல் மற்றும் இரண்டாம் தவணை இலவசமாக போடப்படுகிறது. அதே நேரம், 18 முதல் 59 வயது உடையோர், தனியார் மருத்துவமனைகளில் 386.25 ரூபாய் செலுத்தி பூஸ்டர் டோஸ் போட்டுக்கொள்ளலாம் என, மத்திய அரசு அறிவித்தது. தற்போது, செப்டம்பர் 30ம் தேதிவரை, அனைத்து தரப்பினரும் இலவச பூஸ்டர் டோஸ் போட்டுக்கொள்ள, மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசியை, 1.45 கோடி பேர் போடாமல் உள்ளனர். 50 லட்சம் பேர் பூஸ்டர் டோஸ் போட வேண்டியுள்ளது.

இலவச பூஸ்டர் டோஸ் அறிவிக்கப்பட்டாலும், தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் ஆர்வம் காட்டவில்லை. இதுகுறித்து, பொது சுகாதாரத் துறை இயக்குனர் செல்வ விநாயகம் கூறியதாவது: இலவச பூஸ்டர் தடுப்பூசி போடப்படுகிறது. எனவே, முகாம்களில் சிறப்பு கவனம் செலுத்தி, அனைவரும் தடுப்பூசி போடுவதை உறுதி செய்ய, சுகாதார மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.