ஜார்கண்ட், கார்வா மாவட்டத்தில் 6,000 கோர்வா பழங்குடியினர் மட்டுமே எஞ்சியுள்ளனர். கார்வா என்ற அந்த பழங்குடியினர் மொழி அழிவின் விளிம்பில் உள்ளது. இவர்களை குறிவைத்து கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றுகின்றனர் கிறிஸ்தவ பாதிரிகள். பீகாரைச் சேர்ந்த ஒரு பாதிரி கடந்த ஒரு வருடமாக ஜார்க்கண்ட் துர்க்கியில், இரண்டு உதவியாளர்களுடன் வசித்து வருகிறார். இவர்கள் தற்போது மூன்று கோர்வா பழங்குடி குடும்பங்களை ஏமாற்றி கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றியுள்ளனர்.
சிஞ்சோ என்ற தொலைதூர கிராமத்தில் வசிக்கும் ஹிராமன் கோர்வா என்பவர் உள்ளூர் பள்ளியில் பாரா ஆசிரியராக பணியாற்றுகிறார். இவர் 12 வருடங்களாக முயற்சித்து கோர்வா மொழியில் ஒரு அகராதியைத் தொகுத்திருந்தார். அவரை பிரதமர் மோடி, தனது டிசம்பர் 27, 2020 ‘மனத்தின் குரல்’ வானொலி உரையில் பாராட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.