உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த எஹ்சான் ராவ் என்ற முஸ்லிம் இளைஞன், சஹாரன்பூரில் நடைபெற்ற அமித் ஷா, யோகி ஆதித்யநாத்தின் பேரணியில் கலந்துகொண்டு ‘ஜெய் ஸ்ரீ ராம்’, ‘பாரத் மாதா கி ஜெய்’ என்ற கோஷம் எழுப்பினார். இது சமூக வலைத்தளங்களில் பரவியது. இதனையடுத்து, தேவ்பந்த் மசூதியின் மௌலானாக்கள் அவரை அழைத்து நீ இஸ்லாத்திற்கு எதிராக செயல்பட்டாய்.. இவை இஸ்லாத்தில் தடைசெய்யப்பட்டுள்ளன. ‘ஜெய் ஸ்ரீ ராம்’, ‘பாரத் மாதா கி ஜெய்’ என்று கூறியதற்காக வருத்தம் தெரிவிக்க வேண்டும், இல்லையெனில் இஸ்லாத்தில் இருந்து வெளியேற்றப்படுவாய் என மிரட்டினர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த எஹ்சான் ராவ், “ஜெய் நேரு, ஜெய் பீம், ஜெய் சரண் சிங் என்று கோஷமிடுவதற்கு எதிராக என்றாவது ஃபத்வா (தடை) விதித்தீர்களா? நாங்கள் ராமரின் வழித்தோன்றல்கள். அவர் எங்கள் மூதாதையர். நாம் வாழும் தேசத்தைப் போற்றிப் பாடுவதில் எந்தப் பிரச்சினையும் எனக்கில்லை. ‘ஜெய் ஸ்ரீராம்’ என்பது அன்பின் முழக்கம். கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கையின் மையம் ராமர்” என்றார். இதனால் அவருக்கு எதிராக ஃபத்வா விதிக்கப்பட்டது. அதற்கு “நீங்கள் உங்கள் மதத்தில் மகிழ்ச்சியாக இருங்கள், நான் என் நம்பிக்கையில் மகிழ்ச்சியாக இருப்பேன்” என்று கூறிய எஹ்சான் ராவ் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்போவதாக தெரிவித்தார்.