வங்கதேசத்தைச் சேர்ந்த அகமதுல்லா என்ற முஸ்லிம் மதகுரு, அங்கு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பிரசங்கம் செய்து வருகிறார். மேலும் தனது முகநூல், யு டியூப் உள்ளிட்ட சமூக ஊடகங்களிலும் மத பிரச்சாரம் செய்து வருகிறார். சமீபத்தில், அவர் வெளியிட்ட வீடியோ ஒன்றில், ‘முகநூலில், நமது உணர்வுகளை வெளிப்படுத்த எமோஜி உருவங்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஒருவர் வேடிக்கையாக தெரிவிக்கும் கருத்திற்கு வேடிக்கையை குறிக்கும் எமோஜியை பயன்படுத்துவது தவறல்ல. ஆனால், ஒருவரின் கருத்தை கிண்டல் செய்யும் நோக்கில், ‘ஹாஹா’ என சிரிக்கும் எமோஜிக்கள் பயன்படுத்துவது, முஸ்லிம் மார்க்கத்திற்கு எதிரானது. இனி சமூக ஊடகங்களில் என்னை பின்தொடர்வோர், இதனை செய்ய வேண்டாம். எமோஜி பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது’ என கூறி அதற்கு பத்வா விதித்துள்ளார்.