காதி காகிதத்துக்கு காப்புரிமை

பிளாஸ்ட்டிக்கால் பூமிக்கு ஏற்படும் பாதிப்பை குறைக்க ஏதுவாக, பிளாஸ்ட்டிக் கழிவு, காகிதக்கூழ் கொண்டு கையால் தயாரிக்கப்படும் காகிதத்தை காதி கிராமத் தொழில்கள் ஆணையம் உருவாக்கியது. இந்திய அறிவுசார் சொத்துரிமை அமைப்பின் காப்புரிமை கட்டுப்பாட்டு அமைப்பால் இதற்கு காப்புரிமை அளிக்கப்பட்டுள்ளது. இதனைக் கொண்டு பைகள், கோப்பு உறைகள் உள்ளிட்டப் பல பொருட்களை இந்த ஆணையம் தயாரித்துள்ளது.