ரயில் பயணத்தின்போது எழும் குறைகளை விரைவாகத் தீர்க்கவும், புகார்களுக்குப் பதில் அளிக்கவும் ஏற்ற வகையில், இந்திய ரயில்வே துறையின் உதவி எண்கள் அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டு 139 என்ற ஒரே எண்ணாக மாற்றப்பட்டுள்ளது என்று ரயில்வே துறை அறிவித்துள்ளது. ரயில்வே பாதுகாப்பு பயன்படுத்தப்படும் 182 என்ற உதவி எண்ணில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. மற்ற அனைத்து உதவி எண்களும் நீக்கப்பட்டு, 139 என்ற புதிய உதவி எண் மட்டுமே இனி பயன்பாட்டில் இருக்கும். இந்த உதவி எண்ணில் 12 மொழிகளில் ஐ.பி.ஆர்.எஸ் முறையில் (கணினி மொழி) தங்களுக்குத் தேவையான உதவிகளைக் கேட்கலாம். பாதுகாப்பு, மருத்துவ உதவிக்கு எண் 1, விசாரணைகள், பயணம் தொடர்பான கேள்விகளுக்கு 2, கேட்டரிங் புகார்களுக்கு 3, பொதுவான புகார்களுக்கு 4, லஞ்சம், ஊழல் தொடர்பான புகார்களுக்கு 5, விபத்துகள் தொடர்பான உதவிக்கு 6, புகார்களின் நிலைமை குறித்து அறிய 9 எண்ணையும் பயன்படுத்தி புகாரளிக்கலாம் அல்லது தகவல் பெறலாம்.