பனிமயமாதா விழா உள்ளூர் விடுமுறை!?

தூத்துக்குடி பனிமய மாதா ஆலய திருவிழாவை முன்னிட்டு நேற்று தூத்துக்குடி மாவட்டம் முழுவதுக்கும் உள்ளூர் விடுமுறை விடப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். சப்பர பவனிகள் ஏதும் நடத்தப்படாது, ஆராதனை நிகழ்ச்சிகள் அனைத்தும் மக்கள் பங்கேற்பின்றி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களே பங்கேர்க முடியாத திருவிழா என்றால் எதற்கு உள்ளூர் விடுமுறை? இதே தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசை முத்தாரம்மன் ஆடிக் கொடை விழாவுக்குத் தடை, திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு பூட்டு,  கந்த சஷ்டி விழாவுக்கு உள்ளூர் விடுமுறை ரத்து என ஆளும் கட்சிகளுக்கு கைப்பாவையாக செயல்படும் மாவட்ட நிர்வாகம், கிறிஸ்தவர்கள் விழாவுக்கு மட்டும் தாராளம் காட்டுவது ஏன்? என ஹிந்துக்களும் ஹிந்து அமைப்புகளும் கேட்டுள்ளனர்.