காங்கிரசின் பாகிஸ்தான் பாசம்

சத்தீஸ்கர் மாநிலத்தை ஆளும் பூபேஷ் பாகேல் தலைமையிலான காங்கிரஸ் அரசு, மௌலானா இல்யாஸ் காத்ரியின் தலைமையில் செயல்படும் தாவத் இ இஸ்லாமி என்ற பாகிஸ்தானை சேர்ந்த ஒரு அடிப்படை மதவாத அமைப்பின் அலுவலகம் அமைக்க 25 ஏக்கர் நிலத்தை ஒதுக்க முன்வந்தது. இந்த அமைப்பு, கட்டாய மதமாற்றங்களைச் செய்வதாகவும், பாரதத்தில் பயங்கரவாதத்தை வளர்ப்பதற்கும் உதவி செய்வதாக ஏற்கனவே குற்றச்சாட்டுகள் உள்ளன. சத்தீஸ்கர் மாநில பா.ஜ.கவினரின் கடுமையான எதிர்ப்பு, போராட்டங்களை அடுத்து இந்த அறிவிப்பு விலக்கிக் கொள்ளப்பட்டது. தாவத் இ இஸ்லாமி நிறுவனத்தின் விண்ணப்பம் ஆரம்ப நிலையிலேயே நிராகரிக்கப்பட்டதாக கூறி அந்த விஷயத்தை மூடி மறைத்துள்ளது சத்தீஸ்கர் காங்கிரஸ் அரசு.