கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க உதவுவதற்காக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டி.ஆர்.டி.ஓ) உருவாக்கியுள்ள 1,50,000 ஆக்ஸிகேர் கருவிகளை ரூ 322.5 கோடி செலவில் பி.எம்-கேர்ஸ் நிதியில் வாங்குவதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ஆக்ஸிகேர் என்பது ஆக்ஸிஜன் செறிவு (SpO2) அளவை அடிப்படையாகக் கொண்ட ஆக்ஸிஜன் விநியோக அமைப்பு. இது ஒரு நபர் ஹைபோக்ஸியா நிலையில் மூழ்குவதைத் தடுக்கிறது. டி.ஆர்.டி.ஓ’வின் பெங்களூருவை தளமாகக் கொண்ட பாதுகாப்பு பயோ-இன்ஜினியரிங் மற்றும் எலக்ட்ரோ மெடிக்கல் லேபரேட்டரி (டெபெல்) ஆக்ஸிகேர் அமைப்பை உருவாக்கியுள்ளது. டி.ஆர்.டி.ஓ ஏற்கனவே ஆக்ஸிகேர் அமைப்பின் உற்பத்திக்கான தொழில்நுட்பத்தை பாரதத்தில் பல தொழில் நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளது.