பிரதமர் மோடி அரசுமுறை பயணமாக தமிழகத்திற்கு வருகை புரிந்த பொழுது, அவருக்கு எதிராக சில தி.மு.க, அதன் கூட்டணியைச் சேர்ந்த சில விஷமிகள் திட்டமிட்டே ‘கோ பேக் மோடி’ என்ற ஹேஷ்டேக்கை டிரெண்டிங் செய்தனர். இதனை எதிர்த்து பா.ஜ.கவினர் ‘வெல்கம் மோடி’ என்று போட்டியாக ஹேஷ்டேக் டிரெண்டிங் செய்தனர். ஹெலன் நெல்சன் என்ற நடிகை ஓவியாவும் ‘கோ பேக் மோடி’ ஹேஷ்டேக் பதிவு செய்தார். இதனால் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் நடிகை ஓவியா மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழக பா.ஜ.க ஐ.டி.விங் அமைப்பினர் சி.பி.சி.ஐ.டி. சைபர் கிரைமில் புகார் அளித்துள்ளனர். இந்த புகார் திரைத்துறையினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.