வாக்கு நமது உரிமை! அதனை உறுதியுடன் பதிவு செய்வது நமது கடமை!

நாடும் நாமும் நலம்பெற வேண்டுமெனில் – தேவை : நல்ல வேட்பாளர்கள் மட்டுமல்ல, நல்ல வாக்காளர்களும் தான்! நோட்டாவுக்கு அளித்திடும் வாக்கு – அது தகுதி இல்லாதவர்களுக்கு அளித்திடும் வாய்ப்பு!! முழுமையான ஜனநாயகத்திற்கு அடையாளம் 100% வாக்குப்பதிவு, முதல் நபராகச் சென்று நமது வாக்கினை பதிவு செய்வோம்.
வரும் சட்டமன்ற தேர்தலில் நாம் யாருக்கு வாக்களிக்கப் போகிறோம்? சிந்திக்க சில விஷயங்கள் :
* பகுத்தறிவு என்னும் பெயரில் நமது பாரம்பரிய மரபுகளைக் கொச்சைப்படுத்துவோருக்கு நாம் வாக்களிக்க வேண்டுமா? கந்தர் சஷ்டி கவசத்தை இழிவு செய்த கூட்டத்தினருக்கு நாம் வாக்களிக்க வேண்டுமா?
* ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவை இழிவுபடுத்திய கும்பலுக்கு நாம் வாக்களிக்க வேண்டுமா?
* ஆண்டாள் நாச்சியாரை அவமானப்படுத்தியவனை ஆதரிப்போருக்கு நாம் ஆதரவளிக்கலாமா?
* திருப்பதி ஏழுமலையானை இழிவுபடுத்தியோரை நாம் தேர்ந்தெடுக்கலாமா?
* இஸ்லாமியர் திருமணத்தில் கலந்துகொண்டு நமது சடங்குகளை விமர்சனம் செய்தோருக்கு நாம் வாக்களிக்க வேண்டுமா?
* ரம்ஜான் மற்றும் கிறிஸ்துமஸ் கொண்டாடும் தலைவர்கள் நமது பண்டிகைகள், திருவிழாக்களுக்கு வாழ்த்து கூற மறுக்கிறார்களே! இவர்களையா நாம் ஆதரிப்பது?
* நமது சமய உணர்வுகள் காயப்படுத்தப்படும்போது கண்டுகொள்ளாது, மாற்று மதத்தினருக்கு சிறு சங்கடம் என்றவுடன் பதறிப்போய் ஓடுகின்றனரே! இவர்களா நமக்கான பிரதிநிதிகள்?இதுபோன்ற கயவர் (கருப்பர்) கூட்டங்களைப் புறந்தள்ளி நாம்யாரைத் தேர்ந்தெடுக்க வேண்டும்?
* நமது சமய உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் மாண்புள்ளவர்களுக்கு மட்டுமே வாக்களிப்போம்!
* தேச ஒற்றுமையில் அக்கறை கொண்டவர்களுக்கே வாக்களிப்போம்!
*நம்மையும் நம் நாட்டையும் வளர்ச்சிப் பாதையில் கொண்டுசெல்ல உழைப்பவர்களுக்கே வாக்களிப்போம்!
* பாரம்பரியம் மிகுந்த நமது தமிழ்க் கலாச்சாரம், பண்பாடு குறித்து உண்மையான பெருமிதம் கொண்டு அதனை மேம்படுத்திட பாடுபடுவோருக்கு மட்டுமேவாக்களிப்போம்!

தேசிய வாக்காளர் பேரவை, சென்னை