சென்னைக்கு மாற்ற எதிர்ப்பு

கோவையில் இயங்கிவரும் விதைச் சான்று மற்றும் அங்கக சான்றிதழ் வழங்கும் துறையின் தலைமை இடத்தை சென்னைக்கு மாற்றுவதாக வேளாண்மைத் துறை அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. விவசாயிகளிடம் எந்த கருத்தையும் கேட்காமல், அவர்களுக்கு இத்திட்டம் உதவுமா என யோசிக்காமல் தங்கள் நிர்வாக வசதிக்காக இதனை செயல்படுத்த தீவிரம் காட்டுகிறது தமிழக அரசு. இதற்கு பல்வேறு விவசாய அமைப்புகள் தமிழக அரசின் இந்த முயற்சிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அவ்வகையில், தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் தலைவர் பழனிச்சாமி தலைமையில் விவசாயிகள் விதைகளுடன் வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கினார். இம்மனுவில் இச்சான்று வழங்கும் தலைமை இடத்தை சென்னைக்கு மாற்றினால் கொங்கு மண்டலத்தில் இயற்கை விவசாயம் முடக்கப்படும். விவசாயிகள் போக்குவரத்து உட்பட பல்வேறு சிக்கல்களை சந்திப்பார்கள், நேர விரயம் நேரிடும் என்பதால் இந்நடவடிக்கையை அரசு கைவிட வேண்டும் என்று அதில் வலியுறுத்தப்பட்டது.