குஜராத் முதல்வர் விஜய் ரூபானி, ரிலையன்ஸ் நிறுவன அதிபரான முகேஷ் அம்பானியிடம் கொரோனா பேரிடரின்போது மக்களுக்கு உதவ 1,000 படுக்கை வசதிகளுடன் ஒரு மருத்துவமனையை அமைத்துத்தர சொல்லி கோரிக்கை விடுத்தார். இதனை ஏற்று உடனடியாக மருத்துவமனையை குஜராத் ஜாம் நகரில் அமைக்க முகேஷ் அம்பானி தனது நிறுவன அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அது தற்போது வெகுவேகமாக நிறுவப்பட்டு வருகிறது. மொத்தமுள்ள 1,000 படுக்கைகளில் 400 அடுத்த ஞாயிற்றுக்கிழமைக்குள் செயல்படும், மீதமுள்ள 600 படுக்கைகளைச் மேலும் ஒரு வாரத்தில் பயன்பாட்டுக்கு வரும் என்று குஜராத் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மருத்துவமனை ஜாம்நகர், துவாரகா, போர்பந்தர் மற்றும் அதை ஒட்டிய மாவட்ட மக்களுக்கு பயனளிக்கும். இந்த நிறுவனம் ஏற்கனவே மகாராஷ்டிர அரசுக்கு இலவசமாக ஆக்ஸிஜன் வழங்கிவருகிறது என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயமே.
ஆனால், இந்தியாவின் மிகப்பெரிய கார்ப்பரேட்டுகளாகிய தி.மு.க, காங்கிரஸ் கட்சியினரும் அவர்களது கூட்டணியினரும் இதுவரை தாங்கள் அரசுக்கும் மக்களுக்கும் இதுவரை என்ன உதவிகள் செய்துள்ளோம் என்னென்ன உதவிகள் செய்யப்போகிறோம் என வாய் திறக்க மறுக்கின்றனர். ஹும்… இதுதான் திராவிட கொள்கை போலும்.