நீதிபதிகள் கருத்துக்கு எதிர்ப்பு

நீதிபதி சூர்யா காந்த் மற்றும் நீதிபதி பார்திவாலா தலைமையிலான உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு, கடந்த வாரம் நூபுர் ஷர்மாவின் மனுவை விசாரித்தபோது, ​​உதய்பூரில் கன்னையா லால் தலை துண்டித்து கொல்லப்பட்டதற்கு நுபுர் சர்மாவே பொறுப்பு. அவர் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என கருத்து தெரிவித்தனர். இதற்கு தேசமெங்கும் கடும் கண்டனங்கள் எழுந்தன. அவர்கள் தங்கள் கருத்தை திரும்பப்பெற வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பல ஓய்வு பெற்ற நீதிபதிகளும் இதற்கு கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் 15 ஓய்வுபெற்ற நீதிபதிகள்,  77 ஓய்வுபெற்ற அரசின் மூத்த அதிகாரிகள், 25 ஆயுதப்படை அதிகாரிகள் உள்ளிட்ட 115 பேர் அடங்கிய குழுவினர், நூபுர் சர்மாவுக்கு எதிராக கருணையற்ற இத்தகைய கருத்துக்கள’ தெரிவித்ததற்காக இரண்டு உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு எதிராக அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில், ‘முன்னெப்போதும் இல்லாத வகையில் நீதி வழங்கலின் அனைத்து நியதிகளையும் மீறப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவின் ஒரு பகுதியாக இல்லாத இந்த கருத்துகள் நீதித்துறையின் உரிமை மற்றும் நியாயத்தின் அடிப்படையில் இல்லாதவை. இத்தகைய மூர்க்கத்தனமான விதிமீறல்கள் நீதித்துறையின் வரலாற்றில் இருந்ததில்லை. மிகப்பெரிய ஜனநாயகத்தின் நீதி அமைப்பில் ஒரு அழியாத வடுவாக இது அமைந்துவிட்டது. இதன் மூலம் நூபுர் ஷர்மாவுக்கு நீதித்துறைக்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இது இந்திய அரசியலமைப்பிற்கு எதிரானது. இச்சம்பவம், உச்ச நீதிமன்றத்திற்கே அதிக அதிகாரம் உள்ளது, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தங்கள் விருப்பப்படி எதையும் கூறலாம், அதை யாராலும் தடுக்க முடியாது என்ற மிக மோசமான செய்தியை நாட்டிற்கு கொடுத்துள்ளது’ என தெரிவித்துள்ளனர்.