ரிபப்ளிக் டிவிக்கு தொடர்பில்லை

போலி டி.ஆர்.பி வழக்கில், மும்பையில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்க இயக்குனரகம் குற்றப்பத்திரிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ளது, அதில் போலி டி.ஆர்.பி வழக்கில் ரிபப்ளிக் டிவி ஊடக நெட்வொர்க்குக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை என்பதை உறுதிப்படுத்தியது. மேலும், டி.ஆர்.பி முறைகேடு மோசடியில் மும்பை காவல்துறை விசாரணை இதில் மாறுபாடாக உள்ளது எனவும் தெரிவித்துள்ளது. டி.ஆர்.பி வழக்கில் ரிபப்ளிக் டிவி மீதான குற்றச்சாட்டுகள் அரசியல் சதியின் ஒரு பகுதி. டி.ஆர்.பி வழக்கில் ரிபப்ளிக் டெவியை சிக்கவைக்க அப்போதைய மகாராஷ்டிர உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் அறிவுறுத்தினார் என்று முன்னாள் காவல்துறை ஆணையர் பரம் பீர் சிங் கூறியிருந்தார் என்பது நினைவு கூரத்தக்கது.