‘மைன்ட் டு மைன்ட்’ மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “வெளிநாடுகளில் உள்ள நிறுவனங்கள், பாரதத்தை தற்போது முதலீட்டுக்கு ஏற்ற நாடாக கருதுகின்றன. ஆனால், நமது நாட்டு நிறுவனங்கள் ஏன் தயங்குகின்றன என்பது தான் தெரியவில்லை. அனுமனின் பலம் அவருக்குத் தெரியாது என்பதைப் போல, பாரத நிறுவனங்களின் பலம் அவற்றுக்குத் தெரியவில்லையா, தங்களுடைய சொந்த பலத்தில், சொந்த திறமையில் அவற்றுக்கு நம்பிக்கை இல்லையா, அருகில் உள்ள யாரோ ஒருவர் அதை எடுத்துச் சொல்ல வேண்டுமா? பாரதத் தொழில்துறையினர் முதலீடு செய்வதற்கு தேவையான அனைத்தையும் நாங்கள் செய்து தருவோம். ஆனால், அவர்களிடம் நான் கேட்க விரும்புவது, உங்களை முதலீடு செய்யவிடாமல் தடுப்பது எது? என்பதைத் தான். உள்நாட்டுத் தொழிலை ஊக்குவிக்கும் வகையில், உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை திட்டத்தை அரசு கொண்டு வந்துள்ளது. வரி விகிதங்களையும் குறைத்துள்ளது. இது நமது நாட்டுக்கான நேரம். நாம் இந்த தருணத்தை தவறவிட்டுவிடக் கூடாது” என எடுத்துரைத்தார்.