ஜம்மு காஷ்மீர் பகுதிகளில் கடந்த ஒரு வாரத்தில் பயங்கரவாத தாக்குதல்களில் 7 பேர் வரை படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து பாதுகாப்புப் பணிகள் பலப்படுத்தப்பட்டு உள்ளன. காஷ்மீரில் வசித்து வரும் காஷ்மீர் பண்டிட்டுகளும் அச்சம் அடைந்துள்ளனர். இதனிடையே ஜம்மு மற்றும் காஷ்மீரில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் ஸ்ரீநகர், அனந்த்நாக், குல்காம் உள்ளிட்ட 16 இடங்களில் சோதனை நடத்தினர். அதில் 70 இளைஞர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். கல் வீச்சில் ஈடுபடுவோர், சமூக விரோதிகள் என கடந்த 3 நாட்களில் சுமார் 570 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.