பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா (பி.எப்.ஐ) தடை செய்யப்பட்ட பிறகு கேரளாவில் அதன் நிர்வாகிகளின் செயல்பாடுகளை என்.ஐ.ஏ அதிகாரிகள் கண்காணித்து வந்தனர். இந்நிலையில், டெல்லியில் இருந்து அதிரடியாக கேரளாவுக்கு இரவில் வருகை தந்த என்.ஐ.ஏ அமைப்பின் முக்கிய அதிகாரிகள், கேரளாவில் 56 இடங்களில் நேற்று அதிகாலை முதல் சோதனை நடத்தினர். கேரள காவல்துறையின் உதவியோடு இந்த சோதனை நடைபெற்றது. எர்ணாகுளம் மாவட்டத்தில் 12 இடங்கள், ஆலப்புலா, மலப்புரம் மாவட்டங்களில் தலா 4 இடங்கள், திருவனந்தபுரம், பத்தினம்திட்டா மாவட்டங்களில் தலா 3 இடங்கள், கொல்லம், கோழிக்கோடு மாவட்டங்களில் தலா இரண்டு இடங்களில் இந்த சோதனைகள் நடைபெற்றன. தடை செய்யப்பட்டு இருந்தாலும் கேரளாவில் இந்த அமைப்பு ரகசியாமாக செயல்படுவதாக கிடைத்த தகவல்களையடுத்து இந்த சோதனை நடைபெறுவதாக கூறப்படுகிறது. ஏற்கெனவே சீல் வைக்கப்பட்ட பி.எப்.ஐ அமைப்பின் அலுவலகங்கள் மீண்டும் திறக்கப்பட்டும் சோதனைகள் நடைபெற்றன.