ஹிஸ்ப் உத் தஹ்ரிர் என்ற தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பை சேர்ந்த அப்துல்லா என்ற சரவணகுமார், முகநூல் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் மூலமாக பயங்கரவாத சித்தாந்தத்தை பரப்பினார். இதனையடுத்து தேசிய புலனாய்வு முகமையான என்.ஐ.ஏ அவரை கைது செய்தது. விசாரணையில், இவர் ஐ.எஸ்.ஐ.எஸ் ஆட்சேர்ப்பு, கிலாபத் இயக்கத்தை நிறுவ தூண்டுதல், தேசிய ஒற்றுமை, பாதுகாப்பு, இறையாண்மையை அச்சுறுத்துதல் போன்ற பல்வேறு தேசதுரோக செயல்களில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதனையடுத்து என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றத்தில், அவர்மீதான குற்றப்பத்திரிகையை என்.ஐ.ஏ தாக்கல் செய்தது.