இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டி.ஆர்.டி.ஓ) பல்வேறு வகை ஏவுகணைகளை தயாரித்து வெற்றிகரமாக சோதித்து உள்ளது. அவ்வகையில் கப்பலில் இருந்து நீண்ட தூரம் பறந்து சென்று நிலத்தில் உள்ள இலக்குகளை துல்லியமாகத்தாக்கி அழிக்கும் நிர்பயா ஐ.டி.சி.எம் வகையிலான முதல் கப்பல் ஏவுகணையை வடிவமைத்துள்ளது. கடந்த சில சோதனைகளில் ஏற்பட்ட சிக்கல்கள் சரிசெய்யப்பட்டு தற்போது முழு அளவிலான சோதனைக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. 700 கி.மீட்டருக்கு மேல் பயணிக்கும் இந்த ஏவுகணையின் சோதனை ஒடிசாவில் வரும் 6 அல்லது 8ம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.