பா.ஜ.கவின் தேசிய செயற்குழுவில் நரேந்திர மோடி, எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, ராஜ்நாத் சிங், அமித்ஷா உள்ளிட்ட 80 பேர் உறுப்பினர்கள் உள்ளனர். இக்குழுவிற்கு 50 சிறப்பு அழைப்பாளர்கள், 179 நிரந்தர அழைப்பாளர்களை பா.ஜ.கவின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நியமித்துள்ளார். இந்த சிறப்பு அழைப்பாளர்களில் தமிழகத்திலிருந்து ஹெச்.ராஜா, குஷ்பு இருவரும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு பா.ஜ.கவின் தேசிய பொதுச்செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. தேசிய பொதுச் செயலாளர் பொறுப்பில் இருந்த மேனகா காந்தியும் அவரது மகன் வருண் காந்தியும் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.