சி.என்.என் நியூஸ் 18 டவுன் ஹால் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ் ஜெய்சங்கர், “நமது பக்கத்து வீட்டுக்காரர், நான் நமது இருவீட்டு எல்லையில் பயங்கரவாதத்தை நிகழ்த்துவேன். அது உங்களை பேச்சுவார்த்தைக்கு இழுத்துவரும் என்று சொன்னால் அது சரியான நடைமுறையல்ல. பயங்கரவாதம் தொடர்பான மத்திய அரசின் கொள்கை இதுதான். எனவே, பாகிஸ்தான் பயங்கரவாதக் கருவியைப் பயன்படுத்தி எங்களைப் பேச்சுவார்த்தைக்கு அழைக்க முடியாது. மேலும், பாகிஸ்தானுடனான பாரதத்தின் பல பிரச்சனைகளுக்கு அமெரிக்கா பாகிஸ்தானுக்கு அளித்த நேரடி ஆதரவே காரணம். நான் மிகவும் நம்பிக்கையான நபர். ஒரு நாள் காஷ்மீர் பகுதி மக்களே, ஒரு நாள் இதோ பார், உன் பயங்கரவாதத்தை இத்தோடு நிறுத்திக்கொள் என பாகிஸ்தானிடம் கூறுவார்கள். அந்த நாளுக்காக நான் காத்திருக்கிறேன் இருப்பினும், அது எளிதானது அல்ல என்றும் எனக்குத் தெரியும். மிகப் பெரிய சுயநல கருவிகள், அவர்களை வேறு பாதையில் அழைத்துச் சென்றுகொண்டுள்ளன. ரஷ்யாவுடனான பாரதத்தின் வரலாறு அமெரிக்கா, ஜப்பான் அல்லது ஆஸ்திரேலியாவில் இருந்து வேறுபட்டது. குவாட் கூட்டமைப்பில் உள்ள அனைவருக்கும் எல்லாவற்றிலும் ஒரே மாதிரியான நிலைப்பாடு இல்லை. அப்படி இருந்திருந்தால், பாகிஸ்தான் மீது எங்களுடைய நிலைப்பாடு அனைவருக்கும் இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்த்திருப்போம். நாம் இன்று ஒரு நடைமுறை, இணக்கமான உலகில் இருக்கிறோம். உதாரணமாக ‘குவாட்’. அது இந்தோ பசிபிக்கை மையமாக கொண்டுள்ளது. இது வேறொன்றாக விரிவடையாது’ என கூறினார்.