நடந்து முடிந்த நீட் நுழைவு தேர்வில், தேர்வு எழுத வயது ஒரு தடை அல்ல என்பதால், 63 வயது நிறைந்த முனுசாமி என்ற அரசு பள்ளி முன்னாள் தலைமை ஆசிரியரும் சென்னை வடபழநியை சேர்ந்த 47 வயதான ஜிம் உரிமையாளர் மோகன் என்பவரும் தேர்வில் பங்கேற்று தேர்வெழுதி உள்ளனர். முனுசாமி, டி.என்.பி.எஸ்.சி., குரூப் – 4 தேர்வில் தேர்ச்சி பெற்று, கவர்னர் மாளிகையில் சுருக்கெழுத்தராக பணியாற்றி பிறகு காவல்துறையில் துறையில் நேரடி துணை ஆய்வாளர் தேர்வில் பங்கேற்று தேர்வாகி, நான்கு ஆண்டுகள் பணியாற்றியவர். பிறகு அதில் இருந்து கல்வித் துறைக்கு மாறி முதுநிலை ஆசிரியராக தேர்வாகி, செங்கல்பட்டு, பொலம்பாக்கம் பள்ளி, சென்னை அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றியவர். வடமாநிலங்களில் அப்பாவும், மகளும் நீட் தேர்வு எழுதி பேர்வு பெற்று ஒரே கல்லுாரியில் எம்.பி.பி.எஸ் படிக்கின்றனர் என கூறியுள்ளார் முனுசாமி. மோகன், தன் மகளுக்கு பயிற்சி அளிப்பதற்காக தானும் படித்தவர், நம்பிக்கை காரணமாக தானும் நீட் தேர்வை எழுதியுள்ளார். நீட் தேர்வை கண்டு அச்சப்பட்டு தற்கொலை போன்ற கோழைத்தனமான முடிவுகளை எடுத்து வாழ்வை வீணாக்கிக்கொள்ளும் மாணவர்களுக்கு இவர்களை போன்றவர்கள் நிச்சயம் ரோல்மாடல்கள்தான்.