கடற்படை கப்பல் ஒப்படைப்பு

மும்பையில் உள்ள மசகான் டாக் ஷிப் பில்டர்ஸ் நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட முதல் P15B ஸ்டெல்த் வழிகாட்டி ஏவுகணை அமைப்புகளை கொண்ட டெஸ்ட்டிராயர் வகை கப்பல் இந்திய கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டது. ‘விசாகப்பட்டினம்’ என்று பெயரிடப்பட்ட இந்தக் கப்பலின் கட்டுமானம் உள்நாட்டு போர்க்கப்பல் கட்டுமானத் திட்டங்களுக்கு மத்திய அரசும் கடற்படையும் அளிக்கும் ஆதரவு, உத்வேகத்திற்கு மற்றொரு சான்று. ஆத்மநிர்பர் பாரத் திட்டத்தில் இது ஒரு பெரிய முன்னேற்றம். இக்கப்பலில் நடுத்தர தூர வான் ஏவுகணைகள், பிரம்மோஸ் ஏவுகணைகள், டார்பிடோக்கள், நீர்மூழ்கி எதிர்ப்பு ராக்கெட் ஏவுகணைகள், 76 மி.மீ சூப்பர் ரேபிட் கன் மவுண்ட், ‘ஃப்ளோட் அண்ட் ‘மூவ்’ என பல நவீன ஆயுதங்கள் இடம் பெற்றுள்ளன. 163 மீட்டர் நீளமுள்ள இந்த போர்க்கப்பல் 7,400 டன் எடையும் அதிகபட்சமாக 30 நாட்டிகல் மைல் வேகத்திலும் செல்லும்.