மும்பையில் 2008ல் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதை அடுத்து, நமது நாட்டில் உள்ள பல்வேறு உளவு நிறுவனங்கள் தங்கள் உளவுத் தகவல்களை பகிர்ந்து கொள்வதற்காக ‘நேட்கிரிட்’ அமைப்பை உருவாக்க 2010ல் முடிவு செய்யப்பட்டது. பல காலமாக, பல்வேறு காரணங்களால் செயல்படுத்தப்படாமல் இருந்த இந்த யோசனை, தற்போது பல கட்ட ஆய்வுகள், முயற்சிகளுக்குப் பிறகு செயல்பாட்டுக்கு வரவுள்ளது. சி.பி.ஐ., வருவாய் புலனாய்வுத்துறை, அமலாக்கத் துறை, மத்திய நேரடி வரிகள் ஆனையம், கேபினட் செயலகம், ஜி.எஸ்.டி., கண்காணிப்பு அமைப்பு, போதைப் பொருள் தடுப்பு அமைப்பு, தேசிய புலனாய்வு அமைப்பு, ஐ.பி, கியு, ரா உள்ளிட்ட பல்வேறு உளவு, கண்காணிப்பு அமைப்புகள் இதில் இடம்பெறும். முதல் கட்டமாக 10 உளவு அமைப்புகளும், 21 சேவை அமைப்புகளும் நேட்கிரிட்டில் இணைக்கப்படும். இதனை செயல்படுத்துவதற்கு தேவையான அனைத்து அடிப்படை கட்டமைப்புகளும் செய்யப்பட்டு வருகின்றன.