தேச பாதுகாப்புக்கே முன்னுரிமை

ஐதராபாதில் நடைபெற்ற சேட்டக் ஹெலிகாப்டரின் 60ம் ஆண்டு சேவையையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில்  பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உரையாற்றினார். அதில் அவர், ‘ நமது அரசு தேச பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கிறது. நாட்டின் பாதுகாப்பிற்காக ராணுவம் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தேசமே பங்களிக்கிறது. சேட்டக் ஹெலிகாப்டரை வடிவமைத்த ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தைப் போன்ற மற்ற நிறுவனங்களின் விஞ்ஞானிகள், பொறியாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், ஆகியோரும் ராணுவ வீரர்களைப் போன்றே முக்கிய பங்களிப்பை அளிக்கின்றனர். எம்.எஸ்.எம்.இ தொழில்துறையைச் சேர்ந்த லட்சக்கணக்கான ஊழியர்கள் இத்திட்டத்திற்கான பாகங்களை விநியோகிக்கின்றனர். கடந்த 60 வருடங்களில் சேட்டக் ஹெலிகாப்டர்கள் நாட்டிற்காக தொடர்ந்து சேவை புரிந்துள்ளது. போர், மனித நேய உதவி உள்ளிட்ட தேச சேவைக்காக சுமார் 700 சேட்டக் ஹெலிகாப்டர்கள் தயாரிக்கப்பட்டுள்ளது’ என கூறினார்.