ஹார்வெஸ்ட் இந்தியா அமைப்பு, பல்வேறு வெளிநாட்டு நிதி முறைகேடுகளில் ஈடுபட்டது. இந்த அமைப்பின் தலைவர் சுரேஷ்குமார், முறைகேடான மதமாற்றங்களில் ஈடுபட்டது, பனமுறைகேடு, அரசின் சலுகைகளை பெற கிறிஸ்தவராக இருந்தும் பட்டியலினத்தவர் என்று பொய்யாக ஜாதி சான்றிதழ் பெற்றது, மத்திய அரசு குறித்தும், பாரதப் பிரதமர் குறித்தும் பல தவறான தகவல்கள், பொய் குற்றச்சாட்டுகளை பரப்புவது போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன. இதனை ஆராய்ந்த சட்ட உரிமைகள் பாதுகாப்பு ஆய்வகம் என்ற அமைப்பு இது குறித்து மத்திய அரசின் உள்துறைக்கு ஆதாரங்களுடன் புகார் அளித்தது. இதனை விசாரித்த உள்துறை அமைச்சகம் குற்றச்சாட்டுகளில் உண்மை இருந்ததால் ஹார்வெஸ்ட் இந்தியா அமைப்பின் வெளிநாட்டு பணத்தை பெறும் எப்.சி.ஆர்.ஏ கணக்குகளை முடக்கி உத்தரவிட்டுள்ளது.