அஸ்ஸாமின் அஹோம் ஜெனரல் லச்சித் பர்புகானின் 400வது பிறந்தநாள் கொண்டாட்டம் வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது. இதனையொட்டி டெல்லி விக்யான் பவனில் அஸ்ஸாம் அரசு ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் மோடி, “லச்சித் பர்புகானின் வாழ்க்கை, நாடு எதிர்கொள்ளும் பல நவீன கால சவால்களை தைரியமாக எதிர்கொள்ள நம்மைத் தூண்டுகிறது. அவருடைய வாழ்க்கை, நமது தனிப்பட்ட நலன்களைவிட, நாம் தேசிய நலன்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று நமக்குச் சொல்கிறது. அவரது வாழ்க்கை நமக்குச் சொல்கிறது. தனிநபரோ அல்லது உறவோ சந்ததியினரோ முக்கியமல்ல தேசமே பிரதானமாக இருக்க வேண்டும். அஹோம் முகலாயப் போரில் அஹோம்ஸ் வெற்றி பெற்றபோது கொடுக்கப்பட்ட பணியைச் செய்யாத தனது சொந்த மாமாவையே கொன்றார் பர்புகான். அஹோம் ராணுவம், பர்புகானை பார்த்துக கற்றுக்கொள்ள எந்த அளவிற்கு ஈர்க்கப்பட்டிருக்கும் என்பதை கற்பனை செய்து பாருங்கள். தாய்நாட்டிற்காக கடமையைச் செய்யத் தவறியதற்காக அவரது சொந்த குடும்ப உறுப்பினரையே தண்டித்துள்ளார். நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த எண்ணற்ற சுதந்திரப் போராட்ட வீரர்களின் வரலாறு சுதந்திரத்திற்குப் பிறகு வேண்டுமென்றே நசுக்கப்பட்டது. சுதந்திரத்திற்குப் பிறகு, நம்மை அடிமைப்படுத்திய ஆங்கிலேயர்களின் நிகழ்ச்சி நிரலை நாம் அப்போதே மாற்றியிருக்க வேண்டும். ஆனால் அது செய்யப்படவில்லை. நமது புகழ்பெற்ற சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு தேசிய நீரோட்டத்தில் உரிய இடம் கொடுக்காமல் செய்த வரலாற்றுத் தவறுகளை நாடு இப்போது சரிசெய்து வருகிறது. பாரதத்தின் வரலாறு என்பது, பல நூற்றாண்டுகளாக வெற்றி, போர்கள், துணிச்சல், தியாகத்தால் உருவானது என்றாலும் அவை மறைக்கப்பட்டு அவர்கள் கொள்ளையடிக்கப்பட்டு அடிமைப்படுத்தப்பட வேண்டும் என்று கற்பிக்கப்படுகிறார்கள். கடந்த சில தசாப்தங்கள் அல்லது ஆண்டுகளாக நம்மை அளவிட வேண்டாம். நம்மிடம் துணிச்சலின் நீண்ட பாரம்பரியம் உள்ளது” என கூறினார்.