நியூயார்க்கில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் பாரத தூதர் ஜெனரல் ரந்தீர் ஜெய்ஸ்வால் மற்றும் அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்பு விசாரணை அமைப்பின் (HSI) எரிக் ரோசன்ப்ளாட் ஆகியோர் கலந்து கொண்ட விழாவில், பாரதத்தில் இருந்து திருடப்பட்டு அமெரிக்காவில் விற்கப்பட்ட 15 மில்லியன் டாலர்கள் மதிப்புடைய 248 பழங்கால சுவாமி சிலைகள், கலைப்பொருட்கள் அமெரிக்க அதிகாரிகளால் ஒப்படைக்கப்பட்டன. அதில் சுமார் 1,000 ஆண்டுகள் பழமையான 12ம் நூற்றாண்டின் வெண்கல நடராஜ மூர்த்தியும் ஒன்று. இவை அனைத்தும் விரைவில் பாரதம் திரும்புகின்றன.