மத்தியப் பிரதேச மாநிலம், ஜபல்பூரில் உள்ள பா.ஜ.க சிறுபான்மை பிரிவு உறுப்பினராக உள்ளவர் ஆசாத் அலி. இவர் ஜபல்பூரின் முன்னாள் பா.ஜ.க நகர சிறுபான்மை பிரிவு தலைவராக இருந்தவர். இவர் பா.ஜ.கவுக்கும் அம்மாநில அரசுக்கும் ஆதரவளிப்பதால், அவரது சமூகம் அவரைப் புறக்கணித்துள்ளதாக தெரிவித்துள்ளார். மாஃபியாக்களுக்கு எதிரான மாநில அரசின் நடவடிக்கையை ஆதரிப்பதாக கூறிய அவர், ‘தொழுகை நடத்தவும், மசூதிக்குள் நுழையவும் எனக்கு அனுமதி இல்லை. உள்ளூர் முஸ்லீம் தலைவர்கள் இளைஞர்களை எனக்கு எதிராக செயல்பட பலமுறை தூண்டினர். தற்போதைய சூழ்நிலையால் நானும் எனது குடும்பத்தினரும் உயிர் பயத்தில் இருக்கிறோம். சதிகாரர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான்,மாநில உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா, காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு புகார் அனுப்பியுள்ளேன்’ என கூறியுள்ளார்.