மியான்மர் சோகம்

ராணுவ ஆட்சியில், மியான்மரில் தற்போது 6 கோடிக்கும் குறைவான மக்களுக்குதான் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. தரமற்ற மருத்துவ வசதிகள் கொண்டுள்ளதால் கொரோனாவின் அடுத்த அலையை சமாளிக்க முடியுமா என்பது சந்தேகமே. சர்வதேச சமூகத்திடம் இருந்து மக்களுக்கு தரப்படும் உதவிகள் அனைத்தையும் ராணுவம் தன் சுயநலத்திற்கு பயன்படுத்திக்கொள்கிறது. கடந்த ஏப்ரலில்  100 நாட்களில் அரசியல் பிரச்சனைக்கு தீர்வு எட்டப்படும் என உறுதியளித்த ராணுவம், இதுவரை அதற்கு முயற்சிக்கவே இல்லை. வறுமை, மனித உரிமை மீறல்கள் தொடர்கின்றன. ராணுவ ஆட்சியாளர்கள் இதுவரை 945 பேரைக் கொன்றுள்ளனர், 7,026 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். 5,474 பேர் தடுப்புக் காவலில் உள்ளனர். 2 லட்சத்து 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுபான்மையினர் இடம்பெயர்ந்துள்ளனர். 98 பத்திரிகையாளர்கள், 48 எழுத்தாளர்கள் சிறையில் உள்ளனர்’ என அங்குள்ள சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.