தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டம் மற்றும் இதர நலத் திட்டங்களின் கீழ், புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்கள் நியாயவிலை கடைகளில் ரேஷன் பொருட்கள் வாங்க ஏதுவாக ‘ஒரே நாடு ஒரே ரேஷன்’ என்ற திட்டத்தை சமீபத்தில் மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இந்த நிலையில் தற்போது, இதனை மேலும் எளிதாக்க ‘மேரா ரேஷன்’ (என் ரேஷன்) எனும் அலைபேசி செயலியை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இதில், மக்கள் அருகில் உள்ள நியாய விலைக் கடை தகவல்கள், அனுமதிக்கப்பட்ட உணவு தானியங்களின் அளவுகள், சமீபத்தில் வாங்கிய பொருட்கள், ஆதார் இணைப்பு நிலவரம் மற்றும் பரிவர்த்தனைகள் போன்றவற்றை அறியலாம். புலம்பெயர் தொழிலாளர்கள் புலம்பெயரும்போது அந்த விவரங்களை இந்த செயலியிலேயே பதிவு செய்துக் கொள்ளலாம்.