காவிக்கொடியை கிழித்த முஸ்லிம்கள்

சத்தீஸ்கரின் கவர்தா மாவட்டத்தில் உள்ள ஒரு மா கர்மா சதுக்கத்தில், பகவான் கிருஷ்ணரை குறிக்கும் விதமாக கொடி ஏற்றப்படுவது வழக்கம். அங்கு தங்கள் மதக் கொடியை நிறுவ முஸ்லிம் குழு ஒன்று முயற்சித்தது. அந்த கொடி கம்பத்தில் ஏறிய முஸ்லிம் ஒருவர் அந்த காவிக் கொடியை கொடிக்கம்பத்தில் இருந்து அகற்றியதோடு அதனை கிழித்தும் எறிந்தார். பண்டிகை காலத்தை முன்னிட்டு அங்கு அமைதியையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்த சதுக்கத்தில் இருந்து இரண்டு மதக் கொடிகளையும் அகற்றுமாறு காவல்துறை கூறியது. சமரச கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், அதற்குள்ளாக அங்கு இருதரப்பை சேர்ந்த சில இளைஞர்கள் அங்கு மோதிக்கொண்டனர். கல்வீச்சு சம்பவமும் நடைபெற்றது. நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர 144 தடை உத்தரவு போடப்பட்டது. யாரும் கைது செய்யப்படவில்லை. சி.சி.டி.வி காட்சிகளைப் பயன்படுத்தி குற்றவாளிகளை அடையாளம் கணும் பணி நடைபெற்று வருகிறது. இதனை எல்லாம் கண்டுகொள்ளாத அம்மாநில காங்கிரஸ் முதல்வர், உத்தர பிரதேசத்தில் உள்ள லக்கிம்பூருக்கு சென்று அரசியல் செய்ய முயற்சித்து வருகிறார்.