பாரதத்தின் கொரோனா தடுப்பு மருந்து மிகவும் பாதுகாப்பானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. . ஐ.நா சபை உட்பட, 72 நாடுகளுக்கு இந்த மருந்து அனுப்பிவைக்கப்படுகிறது. ஜெர்மனி, கனடா உட்பட பல நாடுகளும் பாரதத்தின் தடுப்பூசிகளை வேண்டி காத்திருக்கின்றன. 45 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. சுயநலக் காரணங்களுக்காக கொரோனா தடுப்பு மருந்தை எதிர்த்த பல எதிர்கட்சித் தலைவர்களேகூட இதனை செலுத்திக் கொண்டுள்ளனர். இவை தெரிந்திருந்தும் நமது தேசத்தில் முஸ்லிம்கள் கொரோனா தடுப்பூசிகளை போட்டுக்கொள்வதில் தயக்கம் காட்டுகின்றனர் என தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸின் செய்தி ஒன்று கூறுகிறது. கர்நாடகத்தின் மக்தாம்புரா வார்டின் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கவுன்சிலர் ஹாஸி அஸ்ரத்பைக் ‘முஸ்லிம்கள் சோதனைக்கு பயப்படுவதைப் போலவே தடுப்பூசி போடவும் பயப்படுகிறார்கள்’ என கூறியுள்ளார். முஸ்லீம் சமூகத்தில் நம்பிக்கை ஏற்படுத்த, ஒரு நேர்மறையான சூழலை உருவாக்க ஏதுவாக காங்கிரஸ் எம்.எல்.ஏக்களான இம்ரான் கெதாவாலா மற்றும் கயாசுதீன் ஷேக் ஆகியோரை ஏ.எம்.சி மருத்துவர்கள் குழு அணுகியது, ஆனால் அவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை. தடுப்பூசி ஷரியாவுக்கு எதிரானது அல்ல என்பதை பல முஸ்லிம் தலைவர்களும் கூறியுள்ளனர். எனினும் அவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள தொடர்ந்து தயக்கம் காட்டுகின்றனர்.