ஹிந்து சிறுவனை கொன்ற முஸ்லிம்கள்

ஜார்கண்ட் மாநிலத்தில் கடந்த பிப்ரவரி 6 அன்று சரஸ்வதி பூஜையின் சிலை கரைப்பு நிகழ்ச்சியின்போது எழுந்த ஒரு பிரச்சனையில், ரூபேஷ் பாண்டே என்ற 17 வயது சிறுவன் முஸ்லிம்களின் கும்பலால் படுகொலை செய்யப்பட்டான். ஹசாரிபாக்கில் உள்ள லக்னா துல்மஹா இமாம்படா என்ற பகுதியில் ஊர்வலம் சென்றபோது முஸ்லிம் கும்பல் ஹிந்துக்களை கடுமையாகத் தாக்கியது. இதில் ரூபேஷ் பாண்டே படுகாயமடைந்தார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார். இதில் காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்காததால், பா.ஜ.க தலைவர்கள் இதில் தலையிட்டனர். இதனையடுத்து, இவ்வழக்கை விசாரித்த காவல்துறை, முகமது அஸ்லாம், முகமது அனிஸ், முகமது கைஃப் உள்ளிட்ட 27 பேர் மீதும் அடையாளம் தெரியாத 100 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்துள்ளது. இதுகுறித்து பேசிய பா.ஜ.க தலைவர்கள், மாநில அரசு குற்றவாளிகளை பாதுகாக்கிறது. குற்றவாளிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். விரைவு நீதிமன்றங்கள் மூலம் விரைவான விசாரணை நடத்த வேண்டும். சிறுவனின் குடும்பத்திற்கு ரூ. 50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என தெரிவித்தனர். வறுமையில் உள்ள அச்சிறுவனின் குடும்பத்துக்கு பா.ஜ.க சார்பில் நிதி திரட்டி தரப்படுகிறது.