கேராளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள வைப்பூர் ஊட்டுக்குளம் மசூதியில், உஸ்தாத் முகமது ஸ்வாலிஹ் என்பவர் இமாமாகவும் உள்ளார். மேலும், உள்ளூர் மதரஸாவில் ஆசிரியராகவும் பணியாற்றுகிறார். இந்நிலையில், அங்கு படிக்கும் முஸ்லிம் மாணவிகளிடம் அவர் பாலியல் ரீதியான பேச்சுகள், தேவையில்லாமல் தொடுதல் போன்ற குற்றங்களை செய்துள்ளார். இதனையடுத்து ஒரு சிறுமி வீட்டில் அளித்த தகவலையடுத்து சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதுபோலவே மேலும் மூன்று பெற்றோர்களும் புகார் அளித்தனர். இதனையடுத்து, ஸ்வாலிஹ் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்த காவல்துறை அவரை கைது செய்தது. ஸ்வாலிஹ் கைது செய்யப்பட்டபோது அவரை புகைப்படம் எடுக்க முயன்றவர்களை பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா வை சேர்ந்த குண்டர்கள் தாக்கினர்.