சீனாவில், உய்குர் முஸ்லிம்கள் துன்புறுத்தல், அடக்குமுறைகளுக்கு ஆளாகியுள்ளதை உலகமே அறியும். இந்நிலையில், அவர்களைத் தொடர்ந்து சான்யா முஸ்லிம்கள் இப்போது சீன அடக்குமுறைக்கு ஆளாகியுள்ளனர். அவர்கள் கடைகளில் எழுதியுள்ள வாசகங்களை அழிப்பது, அங்கு ‘சீனா டிரீம்’ ஸ்டிக்கர் ஒட்டுவது, முக்காடு போடும் பெண்களை பள்ளிகளில் அனுமதிக்காதது என சீன அரசு செயல்படுகிறது. அங்கு அனைத்து சிறுபான்மை கலாச்சாரத்தையும் அழித்து ‘ஹான்’ கலாச்சாரத்தை வளர்ப்பதை அடிப்படையாகக் கொண்டு செயல்படுகிறது சீன அரசு.