பத்மாவதி தாயாருக்கு சென்னையில் கோயில்

திருமலை திருப்பதி தேவஸ்தனம் (டி.டி.டி), சென்னையில் பத்மாவதி தாயாருக்கு ஒரு கோயில் கட்ட விரும்பியது. இதை அறிந்த பழம்பெரும் திரைப்பட நடிகை காஞ்சனாவும் அவரது சகோதரி கிரிஜா பாண்டேவும் பத்மாவதி தாயார் கோயில் கட்டுவதற்காக சென்னையின் மையப்பகுதியில் தி.நகர், ஜி.என்.செட்டி சாலையில் உள்ள தங்களது 50 கோடி ரூபாய் மதிப்புள்ள ஆறு கிரவுண்ட் நிலத்தை டி.டி.டி.க்கு அளித்தனர். இதற்கான பூமி பூஜை இம்மாதம் 14ல் நடத்தப்பட்டது. பூமி பூஜையில் காஞ்சி மடத்தின் விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமிகள் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினார். விழாவின் ஒரு பகுதியாக, தமிழ்நாட்டில் உள்ள எட்டு கோயில்களுக்கு பசுமாடுகளையும் கன்றுகளையும் வழங்கினார். புதிய கோயிலுக்கு ரூபாய் ஏழு கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக டி.டி.டி நிர்வாகம் அறிவித்துள்ளது. கோயில் கட்டுமானப் பணிகள் 18 மாதத்தில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.