எம்.எஸ்.எ.இ கடன் மதிப்பீட்டுத் திட்டம்

வணிகத் திறனை அடிப்படையாகக் கொண்டு சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு நிதி நிறுவனங்கள் மற்றும் புது யுக நிதித் தொழில்நுட்ப நிறுவனங்கள் கடன் வழங்குவதற்கான டிஜிட்டல் தரவு சார்ந்த கடன் மதிப்பீட்டு முறையை தமிழக அரசு விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. இந்த நிறுவனங்கள் கடன் பெறுவதற்கு மாநில அளவிலான கடன் உத்தரவாதத் திட்டத்தை அரசு தொடங்கும். சரக்கு விநியோகங்களுக்கான பணம் தாமதமாக கிடைப்பது இத்தொழில் நிறுவனங்களின் முக்கிய பிரச்சினை. இதற்காக, மாநிலப் பொதுத்துறை நிறுவனங்கள், சட்டப்பூர்வ வாரியங்கள், உள்ளாட்சி அமைப்புகள், கூட்டுறவு நிறுவனங்களை டிரெட்ஸ் தளத்தில் சேருமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்த நிறுவனங்களின் போட்டித்திறன், உற்பத்தித்திறன், அணுகலை மேலும் மேம்படுத்துவதற்காக இவைகளுக்கான வர்த்தகம் மற்றும் முதலீட்டு வாரியத்தை அரசு நிறுவியுள்ளது. ஆர்.எஸ்.ஐ.எல் இயங்குதளத்துடன் அனைத்துத் துறைகளையும் ஒருங்கிணைக்கும் இணையதளத்தை உருவாக்கப்படுகிறது. அது இன்னும் ஆறு மாதங்களில் செயல்படும் என தமிழ்நாடு ஆசின் தொழில் மற்றும் வர்த்தகத் துறையின் ஆணையர் சிஜி தாமஸ் வைத்தியன் தெரிவித்துள்ளார்.