புதிய தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில், தாய்மொழியில் பொறியியல் படிப்புகளை படிக்கும் வாய்ப்பு அடுத்த கல்வியாண்டு முதல் கிடைக்க உள்ளது. அதற்காக தமிழ், பெங்காலி, குஜராத்தி, ஹிந்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, தெலுங்கு என எட்டு மொழிகளில் பாடப் புத்தகங்கள் தயாராகி வருகின்றன. பிராந்திய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டாலும், சில முக்கியமான தொழில்நுட்ப வார்த்தைகள் ஆங்கிலத்தில் அடைப்புக்குறிக்குள் குறிப்பிடப்படும். பிராந்திய மொழிகளில் பாடங்களை கற்றுத் தர விரும்பும் கல்லுாரிகள் இதற்காக ஏ.ஐ.சி.டி.இ கவுன்சிலில் விண்ணப்பித்து அனுமதி பெற வேண்டும். இதற்காக சமீபத்தில் தாய்மொழியில் பொறியியல் படிப்பு படிப்பது குறித்து ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது. 83,000 மாணவர்களிடையே நடத்தப்பட்ட ஆய்வில் 44 சதவீத மாணவர்கள், தாய்மொழியில் பொறியியல் கற்க ஆர்வம் காட்டியுள்ளனர்.