சுதந்திரமாக உலவும் லவ் ஜிஹாத் குற்றவாளிகள்

டெல்லியில் 35 துண்டுகளாக வெட்டிக்கொல்லப்பட்ட ஷ்ரத்தாவின் லவ்ஜிஹாத் கொலை வழக்கு நாட்டையே உலுக்கியது. ஆனால், கடந்த காலங்களிலும் இது போன்ற பல கொடூர கொலைச் சம்பவங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. துரதிர்ஷ்டவசமாக, இதுபோன்ற பல வழக்குகளில் சிக்கிய முக்கிய குற்றவாளிகள் பலரும் தற்போது ஜாமீனில் சுதந்திரமாக உலாவுகிறார்கள். அதில் ஒன்றுதான் ஷாகிப் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களால் துண்டு துண்டாக வெட்டப்பட்டு வயலில் புதைக்கப்பட்ட ஏக்தா தேஷ்வால் வழக்கு.

இந்த இரண்டு வழக்குகளுக்கும் இடையே சில ஒற்றுமைகள் உள்ளன. ஷ்ரத்தாவை காணவில்லை என்று பல மாதங்களாக யாருக்கும் தெரியாததை போலவே, கொல்லப்பட்ட, பல நாட்களுக்கு பிறகே ஏக்தாவின் லவ்ஜிஹாத் கொலை வழக்கும் வெளிச்சத்திற்கு வந்தது. ஏக்தா கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான ஷாகிப் மற்றும் அவரது கூட்டாளிகளான எட்டு பேரும் தற்போது ஜாமீனில் சுதந்திரமாக உலவுகின்றனர்.

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் வசித்து வந்தவர் ஏக்தா. ஜூன் 5, 2019 அன்று, அவர் மீரட்டில் படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து அந்த பெண்ணின் குடும்ப உறுப்பினர்களுக்கு ஏதும் தெரியாமல் இருந்தது. ஜூன் 13, 2019 அன்று, ஈஸ்வர் பண்டிட் என்ற நபரில் கரும்புத் தோட்டத்திலிருந்து ஒரு நாய் மனித கை ஒன்றை வாயில் கவ்விக்கொண்டு ஓடுவதை அங்குள்ளவர்கள் பார்த்த பிறகுதான் இந்த கொலை வெளிச்சத்திற்கு வந்தது. காவல்துறை விசாரணையில், இந்த கொலை வழக்கு ஒரு வருடமாக தீர்க்கப்படாமல் இருந்தது. மேலும், இந்த வழக்கின் விசாரணை இன்னும் தொடங்கப்படவில்லை.

ஏக்தாவின் தாயார் சீமா தேஷ்வால், “இந்த வழக்கின் நிலை குறித்து எங்களுக்கு எதுவும் தெரியாது. முதலாவது காரணம் எங்களது பலவீனமான பொருளாதார நிலை. இரண்டாவதாக, மீரட் தொலைவில் இருப்பதால், எங்களால் வழக்கைத் தொடர முடியவில்லை. டி.என்.ஏ மாதிரியை வழங்கிய பிறகு, இந்த விவகாரத்தில் காவல்துறையிடமிருந்தோ அல்லது நீதிமன்றத்திலிருந்தோ எந்த ஆவணங்களும் வரவில்லை. என் மகளை கொன்ற ஷாகிப் எனது வீட்டில் உள்ள தங்கம் அனைத்தையும் எனது மகள் மூலம் அபகரித்துக்கொண்டான். அதை காவலர்கள் இன்னும் மீட்கவில்லை. எனது மகள் கொலை செய்யப்பட்டதில் இருந்தே எனக்கு எந்த முஸ்லிமை கண்டாலும் பயமாக உள்ளது” என்றார்.

காவல்துறை அறிக்கையின்படி, அவர்களது விசாரணையில், “ஷாகித் தன்னை ஒரு ஹிந்துவாகக் காட்டிக்கொண்டு ஏக்தாவிடம் நடித்து நட்பானார். இருவரும் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் ஷாகித் ஒரு முஸ்லிம் என்பதை அறிந்த ஏக்தா, அவருடன் வாழத் தயாராக இல்லை. இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, ஷாகிப் ஏக்தாவை கொல்ல முடிவு செய்தார்.

ஜூன் 5, 2019 அன்று ஈத் தினத்தன்று, ஷாகிப், ஏக்தாவை வெளியே அழைத்துச் சென்றார். இரவு 9 மணியளவில், ஏக்தாவுக்கு போதைப்பொருள் கலந்த குளிர்பானத்தைக் கொடுத்தார். அவரது சகோதரர் முஸரத், தந்தை முஸ்தகீம், மைத்துனர் ரேஷ்மா, நவேத், முஸரத்தின் மனைவி இஸ்மத் மற்றும் சக கிராமவாசி அயன் ஆகியோர் ஏக்தாவை மயக்கமடைந்த நிலையில் கரும்புத் தோட்டத்திற்கு அழைத்துச் சென்றனர். ஏக்தாவின் உடைகள் அனைத்தையும் ரேஷ்மா கழற்றினார். குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் சேர்ந்து ஏக்தாவின் கைகள், கால்கள் மற்றும் தலையை வெட்டினர். ஏக்தாவின் கையில் தனது பெயர் பச்சை குத்தியிருந்ததால் ஷகிப் அதனை அறுத்துவிட்டார். சபி அகமது என்பவரின் உடல் கரும்பு தோட்டத்தில் புதைக்கப்பட்டது. உடல் விரைவாக சிதைவடைய வேண்டும் என்பதற்காக அவர்கள் ஏக்தாவின் உடல் மீது உப்பு தெளித்தனர். கைகள், கால்கள் மற்றும் தலைகள் கிராம குளத்தில் வீசப்பட்டன.

கொலைக்குப் பிறகு ஷாகிப் ஏக்தாவின் சமூக ஊடக கணக்குகளை தொடர்ந்து பயன்படுத்தியுள்ளார். ஏக்தாவின் சமூக ஊடக கணக்குகளை தொடர்ந்து இயக்கி வந்தார். அவளது முகநூல் கணக்கை தானே அப்டேட் செய்துகொண்டே, வழக்கமான இடைவெளியில் வாட்ஸ்அப்பில் சுயவிவரப் படத்தை மாற்றினான். இதனால், அவர் உயிருடன் இருப்பதாக அனைவரும் நினைத்தனர். இந்த கொலையில் ஷாகிப் மற்றும் அவரது கூட்டாளிகளின் பங்கு பற்றி ஒரு வருடமாக துப்புக்கிடைக்கவில்லை. இதனால் கொலை வழக்கு தீர்க்கப்படாமல் இருந்தது. ஷாகிப் தனது நண்பர்கள் முன்னிலையில் குடிபோதையில் குற்றத்தை ஒப்புக்கொண்டான். பிறகு அதில் ஒருவர் காவல்துறைக்கு தகவல் கொடுத்தார். அதன் பிறகே ஷாகிப் கைது செய்யப்பட்டார்’ என கூறப்படுகிறது.

“இந்த வழக்கு தற்போது தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் உள்ளது. அடுத்த விசாரணை டிசம்பர் 2, 2022க்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து, வழக்கு மாவட்ட நீதிபதி நீதிமன்றத்திற்கு மாற்றப்படும். இந்த வழக்கை எந்த செஷன்ஸ் நீதிபதி விசாரிப்பார் என்பது பின்னர் முடிவு செய்யப்படும். சாட்சியத்தின் போது, ஏக்தாவின் தாயார் அழைக்கப்படுவார். அரசால் பணியமர்த்தப்பட்ட வழக்கறிஞர்கள் ஏக்தாவின் சார்பாக வாதிடுகின்றனர் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒன்பது பேருக்கும் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது” என்று தௌராலா காவல் நிலைய அதிகாரி ஆர்.கே பச்சௌரி கூறினார்.