நூதன முறையில் பணமோசடி

இணைய வசதிகள் பெருக பெருக அதனை பயன்படுத்தி விதவிதமான திருட்டுகளும் பெருகிவிட்டன. அவ்வகையில், தற்போது ஒருவரின் செல்போன் எண்களைப்போல ஒரே மாதிரியாக இருக்கும் செல்போன் எண்களில் இருந்து அழைக்கும் மர்மநபர்கள், அவர்கள் தாங்கள் வெளியூரில் இருந்து அழைப்பதாகவும், அரசு தேர்வுக்கு விண்ணப்பித்ததில் ஒரு எண் தவறுதலாக நமது எண்ணை கொடுத்து விட்டதாகவும் கூறி அதில் வரும் ஓ.டி.பியை தெரிவித்தால்தான் தேர்வு எழுத முடியும் என கெஞ்சி கேட்பார்கள். பரிதாபப்பட்டு அந்த ஓ.டி.பியை தெரிவித்தால் அடுத்த சில நிடங்களில் நமது வங்கிப் பணம் முழுவதையும் ஆன்லைனில் எடுத்து விடுவார்கள். எனவே, இவ்விவகாரத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். யாருக்கும் ஓ.டி.பி எண்ணை பகிர கூடாது. வங்கியிலிருந்து வருவதுபோல லிங்க் எதுவும் செல்போனுக்கு வந்தால் அதையும் கிளிக் செய்ய வேண்டாம் என சைபர் கிரைம் காவல்துரையினர் எச்சரித்து உள்ளனர்.