ஜோஹோ நிறுவனத்தின் தலைவரான ஸ்ரீதர் வேம்பு அமெரிக்காவில் நிறுவனம் நடத்துபவர், பல கோடிகளுக்கு அதிபதி. ஆனால், திரு நெல்வேலியில் ஒரு கிராமத்தில் வாழ்ந்துகொண்டு அங்குள்ள குழந்தைகளுக்கு டியூஷன் எடுப்பது, சைக்கிளில் பயணிப்பது என மிக எளிமையான வாழ்வு வாழ்ந்துக்கொண்டிருப்பவர். மக்களுக்கு உதவும் மனோபவமும் இவருக்கு அதிகம். மாணவர்களுக்கு இலவச கணினி பயிற்சி உள்ளிட்ட பல்வேறு சமுதாய சேவைகளை சத்தமில்லாமல் செய்து வருகிறார். தற்போது கொரோனா பாதித்துள்ள சூழலில் மக்களின் பசிப்பிணியை போக்க தினமும் 6.000 பேருக்கு இலவவசமாக உணவு சமைக்க சென்னை கூடுவாஞ்சேரியில் ஏற்பாடு செய்துள்ளார். இது இன்னும் சில நாட்களில் தென்காசி, கூடலூர், தேனி போன்ற இடங்களுக்கு விரிவுபடுத்தப்படும். உணவு தயாரிக்கும் அளவு விரைவில் 12 ஆயிரமாக உயர்த்தப்படும் என தெரிவித்துள்ளார். மேலும், சேவாபாரதி, கேசவ சேவா கேந்திரம் உள்ளிட்ட அமைப்புகளுடன் இணைந்து தடுப்பூசி முகாமும் நடத்தி வருகிறது இவரது நிறுவனம்.